மாமன்னன் படம் முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை என சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி(Maamannan) கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
இந்த படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.மேலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறி வருகிறது.
பட்டியலின மக்களின் அடையாளத்தையும், அரசியலையும், ஆதிக்க வர்க்கம் எப்படி தங்களுக்கான அரசியலில் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை வெளிப்படையாக இப்படம் பேசியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மாமன்னன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஓ பன்னிர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு, இது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து,கூட்ட்டணி குறித்து பாஜகவிடம் தான் கேட்க வேண்டும். மேலும் தனது கட்சி மற்றும் கட்சி சார்ந்த கருத்துக்களை கூற முடியும். ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என தெரிவித்தார்.
பின்னர் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை வைத்து உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றும், படம் பார்த்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும்.
உதயநிதியின் இயக்கம் வேற,எங்களுடைய இயக்கம் வேறு, எங்கள் கட்சியில் இருந்து திரையில் நடித்து இருந்தால் அதில் இருக்கக்கூடிய கருத்துக்களை கேட்டால் சொல்லி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.