ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி தேவர் குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஜேந்திர பாலாஜி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,09,959 வாக்குகள் பெற்று, 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (EVKS Elangovan wins) பெற்றார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு வாங்கி கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.