ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு (Thennarasu) வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதேபோல் அனைத்து கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு (Thennarasu) இன்று காலை காய்கறி சந்தைக்குப் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளார்.
கடந்த கொரோனா காலத்தில் காய்கறி சந்தையை ஆர்கேவி சாலைக்கு மாற்ற நடவடிக்கை வேண்டும் என்று அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசுவிற்கு வியாபாரிகள் கோரிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் தென்னரசு வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று வியாபாரிகள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இன்று பிரச்சாரத்திற்கு வருகை தந்த தென்னரசுவிற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.