உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
அதிகளவிலான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்திருந்தது.
Also Read : திருப்பதி கோயிலில் நேற்று ஒரு நாளில் 5.05 கோடி காணிக்கை..!!
இதனால் இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தகை மற்றும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த இ-பாஸ் நடைமுறையை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே மே 7 முதல் அமல்படுத்தப்பட்ட நடைமுறை, ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த நிலையில், செப். 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.