தமிழ்நாடு மட்டுமில்லாம தேசிய அரசியல் வட்டாரத்துல மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கு முதல்வர் முக.ஸ்டாலினுடைய Speaking4India -ன் 3 ஆவது ஆடியோ! இன்றைய ஆடியோல அவர் எந்த விஷயத்தை பத்தி பேசியிருக்காரு அதன் உள்ளார்ந்த விஷயங்கள் என்னென்ன, அதன் தாக்கங்கள் பத்தின யோக கருத்துக்கள் என்னென்ன அப்படீங்குறத பார்க்கலாம்!
Speaking4India ஆடியோ தொடர்ல முதல்வர் முக.ஸ்டாலின் இன்னைக்கு பேசியிருக்க கருப்பொருள் “மாநில உரிமைகள்”!
“அழகிய பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாக விளங்கும் இந்தியாவை பாஜக சிதைக்க நினைக்கிறது” ன்னு மையப்புள்ளியா இந்த வரிகள வச்சு மாநில உரிமைகளுக்கு எதிரா மத்திய அரசு பண்ணிக்கிட்டு வர்ற செயல்பாடுகள பட்டியலிட்டிருக்க முதல்வர் அதுல முதலாவதா குறிப்பிடுறது, இந்தியா கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்க பல்வேறு மொழி, இன, பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், அவற்றிற்கான அரசியல் சட்ட உரிமைகள் இருக்கு. இத்தனையும் கடந்து நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால், இதை சிதைக்க முயற்சிக்கும் பாஜக இந்தியாவின் ஜனநாயக அமைப்பையே சிதைக்கிறது. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, MLA-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறது பாஜக.
மாநில முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமை பற்றி பேசிய பிரதமர் மோடி. தராது மாநில உரிமைகளை பறிக்கிறார். RSS விரும்பும் சர்வாதிகார ஆட்சியை கட்டமைக்க பாஜக முயற்சிக்கிறது என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய மாநில அரசுகளுடன் ஆலோசிப்போம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். மாநில அரசுகளுக்கு கூடுதலாக நிதி ஆதாரங்கள் வழங்குவோம் என பிரதமர் மோடி சொன்னார். ஆனால், மாறாக தற்போது GST என்ற அடைமுறையால் மாநிலங்களின் நிதி நிலை ICU-ல் உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி இழப்பை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட போகிறது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குரல்பதிவின் மற்றுமொரு முக்கிய பதிவாக, கடந்த ஆடியோவில் CAG அறிக்கையில் வெளியிடப்பட்ட பாஜக அரசின் ஊழல்கள் குறித்து பேசியிருந்த நிலையில், அதையடுத்து ஊழல்களை அம்பலப்படுத்திய CAG அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்திருக்கிறது இந்த பாஜக அரசு என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுக்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைப்பு; பிரதமர் மோடி படத்தை போடவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்துவோம் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது; மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் கவுன்சில்களை முடக்கியது; தமிழ்நாட்டின் 19 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஆளுநரை நியமித்து மாநிலங்களின் உரிமையையும் சட்டமன்றத்தின் மாண்பையும் மத்திய அரசு சிறுமைப்படுத்துவது; தேசியக் கல்விக் கொள்கை என மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, மாணவர்களின் கல்வி உரிமையைச் சிதைப்பது என மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இறுதியாக “மாநில சுயாட்சி வெல்ல வேண்டும் என்றால், அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மினி நாடாளுமன்ற தேர்தலாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தல்களில் மக்கள் அனைவரும் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியின் கையில் இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களை காப்போம்! இந்தியாவை காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!” என குறிப்பிட்டு உரையை முடித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வர்ற Speaking 4 India-ன்ற இந்த ஆடியோக்கள் தேசிய அரசியல் வட்டாரத்துல விவாதங்களுக்கு உள்ளக்கிட்டு வர்ற நிலையில, அதன் மூலமா பாஜக அரசின் மீதான குறைகளும் நீண்ட விவாதத்துக்கு உள்ளாக்கிட்டு வர்றதும் யதார்த்தம். அதனுடைய வெளிப்பாடாகவே பார்க்கப்படுது, முதல்வர் குறிப்பிட்ட, CAG அதிகாரிகளின் இடமாற்றம்!
இதில், குறிப்பிட்டு மாநில உரிமைகள் பத்தி பேசி, நடக்கப்போற 5 மாநில தேர்தல்கள குறி வச்சிருக்க முதல்வர் ஸ்டாலின், சம்மந்தப்பட்ட மாநிலங்களான, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள்ல பாஜகவின் தோல்விக்கு வழி வகுக்க முயற்சிக்கிறார். அதே நேரம், அங்க இருக்க, மக்களோடு ஒன்றிய ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இக்கருத்துக்கள எந்த அளவிற்கு மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க போறாங்க? அந்த பிராந்திய மக்கள் தமிழக முதல்வரான ஸ்டாலினின் கருத்துக்களை எந்த அளவிற்கு சீரியஸா எடுத்துக்க போறாங்க? அப்படீங்கிறது இங்க அடுத்தகட்ட சவால்!
குறிப்பா சனாதனம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பிறகு திமுக மீதான வட இந்திய மக்களின், குறிப்பா இந்துக்களின் பார்வை எப்படி இருக்கு அப்படீங்கிறதும் இங்க கவனிக்கப்பட வேண்டியிருக்கு. அந்த விஷயத்தை முன்னிறுத்தி பார்க்கும்போது, அங்குள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்களை கொண்டு செல்றதுல சுணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கு அப்படீங்கிறது இங்க அரசியல் விமர்சகர்களின் கருத்து.
எனவே, Speaking 4 India-ன்ற இந்த ஆடியோக்கள் தென்னிந்தியால ஒரு வகையான மாற்றத்தையும், வட இந்தியால சற்றே குறைவான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்னு யூகிக்கப்படுது. அல்லது மாறாக இவை பெரிய முக்கிய தாக்கங்களுக்கு வழிவகுக்குமா? 5 மாநில தேர்தல்களையும், நாடாளுமன்ற தேர்தல்லையும் இந்தியா கூட்டணி எதிர்பார்க்கும் மாற்றத்த கொடுக்குமான்னு வரும் காலங்கள்ல பொறுத்திருந்து தான் பார்க்கணும். ஏன்னா, இங்க மாற்றத்தை எதிர்பார்த்து இந்தியா கூட்டணியா பத்தி யோசிக்கிறவங்க மத்தில முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளும் பிரச்சாரங்களும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கு. ஆக மொத்தத்துல பொறுத்திருந்து பார்ப்போம்.. வரப்போகும் 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் Speaking 4 India ஆடியோக்களின் விளைவை!