கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மோசமான பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவ்ரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
15-வது ஐபிஎல் சீசன் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு நீண்ட காலம் இல்லை என்பதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 2 டக் அவுட்களும் அடங்கும்.
அதே போல் நடப்பு தொடரில் விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
‘இருவரும் சிறந்த வீரர்கள். விரைவில் இருவரும் ஃபார்முக்கு திரும்பி விளையாடுவார்கள், அதிக ரன்களை அடிக்க தொடங்குவார்கள் என நம்புகிறேன். விராட் கோலியின் தலையில் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஆனால் தனது மோசமான ஃபார்மில் இருந்து அவர் மீண்டு வருவார்’ என தெரிவித்துள்ளார்.