வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை (gold price) குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராம் ரூ.5,290ஆகவும், சவரன், ரூ.42,320ஆகவும் இருந்தது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.5,280ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 240ஆகவும் குறைந்துள்ளது.
மேலும், கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,280க்கு விற்கப்படுகிறது.
கடந்த 5வது நாளாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளி விலை இன்றும் குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.80 ஆக இருந்த நிலையில், கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.70 ஆகவும், கிலோ ரூ.71,800 ஆக இருந்த நிலையில், கிலோவுக்கு ரூ.100 சரிந்து, ரூ.71,700 ஆக குறைந்து உள்ளது.