ITamilTv

மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண் வெளியீடு!

government action sexual harassment in schools new number

Spread the love

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த உதவி எண்ணை வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல உள்ளோம் என்று தெரிவித்துள்ளோம்.

government-action-sexual-harassment-in-schools-new-number
government action sexual harassment in schools new number

மேலும் பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்து பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த உதவி எண்ணை வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இந்த எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது என்றும் இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version