நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank)தனது மும்பை அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான தேதிகள் :
ஆன்லைன் எழுத்துத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும்.பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பம் செய்வது எப்படி :
இதற்கான விண்ணப்பங்களை பாரத ஸ்டேட் வங்கியின் https://bank.sbi/web/careers/current-openings OR https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.