2023ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.இந்த நிலையில் சில தினங்களாக தமிழகம் மற்றும் தமிழ் நாடு என்ற சர்ச்சை இருந்த வந்த நிலையில்,ஆளுநர் சட்டமன்றம் உள்ளே வந்ததும் தீடிரென தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ‘முதல் கூட்டத்தில் உரையாற்றுவது பெரு மகிழ்ச்சி அடைந்ததாகவும் என் இனிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாககிட்டத்தட்ட 40 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர் கடைசியாக ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
முதலமைச்சர் கண்டனம் :
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம், பெண் அடிமைத்தனம் ஒழிப்பு போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துவிட்டார்.
மேலும் சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார் அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
ஆளுநர் அரசியல்வாதி போல் நடக்கிறார்.
அவரது முதலாளிகளுக்கு இத்தேர்தலை எப்படியாவது வெல்ல வேண்டும்.பயம் பற்றிக்கொண்டுள்ளது.
மதிப்பிற்குரிய @rajbhavan_tn தன் பதவியிலிருந்து விலகவேண்டும்.அவர் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது- @pcsreeramhttps://t.co/VkcQSRRy0E | #RNRavi #PCSreeram pic.twitter.com/H12w48b00y
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) January 6, 2023
மேலும் ஆளுநர் உரையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதம் பாடும் முன்பே அவையை விட்டு பாதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட்:
ஒரு மாநிலத்தின் ஆளுநர் தற்போது அரசியல்வாதியைப் போல நடந்து கொண்டிருக்கிறார்;
- அவருடைய முதலாளிகளுக்கு இந்தத் தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற பயம் பற்றிக்கொண்டிருக்கிறது
- இந்த தேசத்திற்காக எமெர்ஜென்ஸி காலகட்டத்திலேயே துணிவுடன் நாம் போராடினோம். இப்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிராக நாம் புரிய வேண்டிய ஒன்று.
- ஆளுநர் தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும். அவருடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
- நம்முடைய தேசப்பற்றை வரலாறு அறியும். ஒவ்வொரு இந்தியனும், அவனுடைய தாய்மொழியை அதிகம் நேசிப்பவன்.
- தாய்மொழியின் மீதான அன்பே நம்மை மனிதத்துடன் வைத்திருக்கிறது என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார்.