சுதந்திரப் போராட்ட தியாகிகள் சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி(Governor Ravi) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோரின் தேசபக்தி மற்றும் அளப்பரிய தியாகங்களை ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆளுநர் ஆர்.என். சுப்ரமணிய சிவா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளார். இளம் சுதந்திரப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன், காவலர்களின் தடியடிக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல் தனது கடைசி மூச்சு வரை மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் என்று முழக்கமிட்டதாக ரவி கூறினார்.
ஆங்கிலேயர்களால் கொடூரமாக தாக்கப்பட்டாலும், தாய்நாட்டிற்காக தவம் செய்தவர்கள் இருவரும் என்றும், அவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பிற்கு நமது இந்திய தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் என்றும், அவர்களின் வாழ்வு வரும் தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் ஆளுநர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்த்ராவ் பாட்டீல், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இருபெரும் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.