TN Assembly Issue| தமிழக சட்டப்பேரவை கூட்டதொடரில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தது சரியல்ல..என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார கல்வி மையத்தில் பாரதப் பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தார்.
இந்த தொடக்க விழாவிற்கு ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை…ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமரின்
மக்கள் மருந்தகத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த கேள்விக்கு,”“ திமுக எதையுமே சரியாக செய்யாது என்பதற்கு உதாரணம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Governor Action | ”தமிழக அரசு -ஆளுனர் மோதல் தொடரக்கூடாது..” -அன்புமணி கோரிக்கை!
மேலும் அதை பற்றி கருத்து கூற முடியாது என தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் சட்டப்பேரவை புறக்கணித்தது(TN Assembly Issue) குறித்த கேள்விக்கு, நான் ஆளுநராக இருப்பதால் சொல்கிறேன் நேற்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் செய்தது தவறு.
உரையின் தமிழாக்கத்தை அவர் வாசித்துள்ளார். முடிந்தவுடன் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும்.
அதுதான் முறை. அதற்குப் பிறகு சில கருத்துகளை அவர் கூறியிருக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதை ஆளுநர் எதிர்பார்த்திருந்தார். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
தெலங்கானாவில் ஆளுநர் உரையை தராததால், அந்தஆட்சியை வீட்டுக்கு அனுப்பிஉள்ளனர்.
இதை தமிழக பேரவைத் தலைவர், அமைச்சர் ரகுபதி ஆகியோர் உணர வேண்டும்.
தெலங்கானாவில் புதிய ஆட்சியில் 45 நாட்களில் இருஆளுநர் உரையை வாசித்துள்ளேன் என்றார்.
இதையும் படிங்க:https://x.com/chennaipolice_/status/1757062587949465926?s=20
தொடர்ந்து பேசிய அவர்,”எதுவாக இருந்தாலும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம், கேள்வியே கேட்கக்கூடாது என்பதுபோல மாநில அரசு செயல்படக் கூடாது.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.