இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி (GSLV) ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில், ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை.
மேலும், வர்த்தகரீதியாக முதல் முறையாக இந்திய ராக்கெட் அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை (GSLV) விண்ணுக்கு சுமந்து செல்கிறது. குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது.
தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய 2வது ஏவுதளத்திலிருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் one web நெட்ஒர்க் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 சாட்டிலைட்களை ஜிஎஸ்எல்வி சுமந்து சென்றது.
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய இணைப்புகளுக்காக 30 செயற்கைக்கோள்களுடன் அதிக எடை கொண்ட எல்விஎம் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதற்கு எனது பாராட்டுகள் என்றும்,
எல்விஎம் 3 ராக்கெட்டானது, இந்தியாவின் சுயசார்பு தன்மைக்கு எடுத்து காட்டாகவும், செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்தும் சர்வதேச சந்தையில், இந்தியாவின் போட்டித் திறனை அதிகரிக்க செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.