சமூக வலைத்தளங்களில் மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகளை சொல்வதில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் ஷர்மிகா. இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் யூடியூப் சேனல்களில் வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு வழக்கத்தை அறிவுறுத்துகிறார் மேலும் ஹெர்பல் காலனிக்கல் என்ற மருதக தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளை வழங்கி வருபவர் இவர் யூடியூப் இன்ஸ்டாகிராம் முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது.
”தினமும் நான் டீஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகப்பொலிவாகும்’
‘ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை போட்டுவிடும்’
‘நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நம்மளால டைஜஸ்ட் செய்ய முடியுமா”
போன்ற கருத்துக்களை அவ்வப்போது வீடியோக்களில் தெரிவித்து வந்தார்.
இப்படி சித்த மருத்துவர் என்கின்ற பெயரில் தேசிய சரணின் மகள் சார்மிக்க மருத்துவ நெறிமுறைகளை எதிராக தவறான கருத்துக்களை சமூக ஊடகங்கள் மீது பரவி பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதலை செலுத்துவதாக டாக்டர் பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷர்மிகா ஒரு தடையால் மருத்துவமனையின் முதல்வராக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் சொல்வதில் எந்த தடைகும் இல்லை ஆனால் மருத்துவ விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துக்களை பேசவும் கூடாது பரவும் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலையில் i தமிழ் ( i tamil channel) தொலைக்காட்சியில் நெறியாளர் சிக்கன் பீஃப் மீன் போன்ற உணவுகளில் எந்த வகையான உணவு நமக்கு சத்து வாய்ந்தது என்ற நெறியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர் முதலில் நமக்கு சத்தான உணவு என்றால் அது மீன் முதன்மை வாய்ந்தது.
மேலும் இது போன்ற உணவுகளில் ஸ்விகி zomato போன்ற ஆன்லைன் டெலிவரியில் வாங்குவது தவிர்க்கவும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சித்த மருத்துவத்தில் மாட்டு கறி இன்றில்லை எந்த இறைச்சியும் சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடவில்லை யார் யாருக்கு எந்த சத்தான உணவு தேவைப்படுகிறது. அதற்கேற்றார் போல அசைவமோ சைவமோ சாப்பிடலாம் மாட்டு கறி சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து இவர்கள் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது என்று மருத்துவர் பார்த்திபன் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் பா.ஜ.க-வின் டெய்சி சரண் ஆடியோ பரபரப்பை உண்டாக்கிய பேச்சைவிட, தற்போது அவரது மகள் டாக்டர் ஷர்மிகா சரண் பேசும் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.