நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்.
இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்.
Also Read : தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கிய பொறுப்பு..!!
ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும்.
தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.