ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு, HitMan Rohit ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது.
விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பட்டயகிளப்பியது .
ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இறுதிவரை நன்றாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் செம சொதப்பு சொதப்பி உலகக்கோப்பை அலேக்காக ஆஸ்திரேலியா அணிக்கு தூக்கி கொடுத்தது .
இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவுடன் மோதிய இந்திய அணி அதில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது .
இந்நிலையில் அடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி வரும் 11ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது போட்டி 14ஆம் தேதி இந்தூரிலும், கடைசி போட்டி 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரோஹித் தலைமையிலான T20 இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
HitMan Rohit ரோஹித் ஷர்மா (C), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
இந்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் சில வீரர்கள் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி அபார சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் .
ஆனால் கடந்த சில போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் தவிக்கும் சுப்மன் கில்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் சிறப்பாக விளையாடி கம் பாக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : https://itamiltv.com/ramadass-angry-on-tngovt-to-speed-up-solar-power-projects/
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஹர்திக், சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி சிறப்பாக விளையாடி போட்டியை வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்