நான் மனிதப்பிறவி அல்ல… (I am not a human being) கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைத் ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : தற்காலிக ஆசிரியர்கள்.. இதுதான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா? – ராமதாஸ்!
ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது..
“நான் மனிதப்பிறவி அல்ல… (I am not a human being) கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.
என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன்.
ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன்.
இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.
சிலர் இதற்கு எதிராக பேசலாம்; ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்.
என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.
ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளார்.