எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான் தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை.
Also Read : திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல IPS பதவி – கொதித்தெழுந்த வருண்குமார் IPS
தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.