I. Shanmuganathan passed away : மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
அவருக்கு கவிஞர் வைரமுத்து எக்ஸ் வளைத்தபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், (I. Shanmuganathan passed away)
“ஐ.சண்முகநாதன் மறைந்தாரே!
முதுபெரும் பத்திரிகையாளர்
70 ஆண்டுகளை
இதழியல் துறைக்கே
அர்ப்பணித்தவர்
தமிழர் தந்தை
சி.பா.ஆதித்தனாரால்
வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்
அவர் மறைவு
பத்திரிகைத் துறையின்
கட்டைவிரல் ஒடிந்ததுபோல்
வலிக்கிறது
தினத்தந்திதான் அவருக்குக்
குடியிருந்த கோயில்
தான்பெற்ற
கல்வி, எழுத்தாற்றல்
உடல்வலிமை எல்லாவற்றையும்
பத்திரிகைத் துறைக்கே
பயன்படுத்தியவர்
தினத்தந்தியின் மொழிநடையை
முன்னெடுத்துச் சென்ற
முன்னோடிகளுள் ஒருவர்
பல படைப்புகளைப்
படைத்த நாவலாசிரியர்
‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற
அழிக்கமுடியாத
ஆவணத்தின் ஆசிரியர்
அவர் எழுதிய ‘உலக வரலாறு’
மரணத்தை வெல்வதற்கு அவர்
படைத்துக்கொண்ட
பனுவல் ஆகும்
தமிழக அரசின்
கலைஞர் எழுதுகோல்
விருதுபெற்ற
பெருமை பெற்றவர்
என்னை வளர்த்தவர்களுள்
அவரும் ஒருவர்
அவர் உடல் ஓய்வுறுக
புகழ் என்றும் நின்று நிலவுக
ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : துரோகத்தின் உருவம் இளையராஜா..” – Journalist Pandian Exclusive தகவல்!