Actor Mohan : நடிகர் மோகன் ஹரா படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் நிலையில், பேட்டி ஒன்றில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறியதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
80களில் காதல் நாயகனாக கொடி கட்டி பறந்தவர் தான் மைக் மோகன். இவர் 1980ல் வெளிவந்த மூடுபனி என்கிற படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்ததோடு தேசிய விருதும் பெற்றது.
அதனை தொடர்ந்து மோகன் நடித்த அனைத்து படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததால் வெள்ளிவிழா நாயகனாக மோகன் கொண்டாடப்பட்டார்.
பெரும்பாலான படங்களில் மோகன் மைக் வைத்துக்கொண்டு பாட்டு பாடுவது போல் நடித்ததால் இவரை மைக் மோகன் என்று அனைவரும் செல்லமாக அழைக்க தொடங்கினர்.
1980 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த ரஜினி மற்றும் கமலுக்கு நிகராக மைக் மோகன் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்தது.
இதனால் மோகன் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். ஆனால், இவருடைய இந்த வெற்றி பயணம் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.
இதையும் படிங்க : June 6 Gold Rate : எகிறியது தங்கம் விலை!
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் வரிசையாக பல சறுக்கல்களை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என்று முழுக்கு போட்டு விட்டார்.
அந்த சமயத்தில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகளும் வெளிவர தொடங்கின.
ஆனால் அதை பற்றி எந்த ஒரு இடத்திலும் மனம் திறந்து பேசாமல் இருந்து வந்த மோகன் தற்போது ஹரா பட பிரமோஷனுக்காக அளித்த பேட்டியில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது..
“90களில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து நான் இறந்துவிட்டதாகவும், அதனால் தான் படத்திற்கு நான் முழுக்கு போட்டுவிட்டு பாதியிலேயே சென்றதாகவும் பேசினார்கள்.
இந்த செய்தியை கேட்டு என்னுடைய ரசிகர்கள் பதறி அடித்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்தார்கள்.
இந்த விஷயம் எனக்கு மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
என்னை பொறுத்தவரையில் அது உண்மையாக இருந்தால் தான் நான் பீல் பண்ணனும். ஆனால் எனக்கு அப்படி எந்த பீலிங்கும் இல்லை என தன்னை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் Actor Mohan.
நடிகர் மோகன் நடிப்பில் தயாராகியுள்ள ஹரா திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.