அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமிக்கு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்ட ரசிகர்கள், அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமிக்கு ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்தியா வருகை தந்திருக்கும் ஆஸ்திரேலியா அணியின் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியா பிரதமரும் முதலில் அரை மணி நேரம் பார்த்து ரசித்தனர்.
மேலும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் நட்புறவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மோடி வந்ததிருந்தார்.
அப்பொழுது ,இந்திய வீரர்கள் மைதானத்திற்கு வெளியே இருந்தபோது முகமது ஷமியின் பெயரைச் சொல்லி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சிலர் முழக்கமிட்டனர்.தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிப் பரவி வருகிறது.
இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒருவரை பார்த்து மத ரீதியாக எழுபிய கோஷங்கள் பார்த்து சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, முகமது ஷமிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் இனம் மொழி கலாச்சாரம் இது போன்ற கலாச்சாரங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் மக்களை ஒருங்கிணைத்து காட்டுவது தான் விளையாட்டு. ரசிகர்கள் வீரர்களின் திறமையும் அவர்கள் விளையாடும் ஆட்டத்தை பற்றி மட்டுமே விமர்சிக்க வேண்டுமே தவிர,
இதுபோன்று மதம் இனம், ஒருவர் கேலி யான போன்ற விமர்சனங்களை விளையாட்டுகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்பொழுது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது