மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (election results 2023) நாளை வெளியாக உள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது.
மிசோரமில் வாக்கு எண்ணிக்கையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு (திங்கட்கிழமை) தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் நாளை டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
மிசோரமின் 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது.சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு வெவ்வேறு கட்டங்களாக வாக்களிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச சட்டசபையின் 230 உறுப்பினர்களுக்கு, மாநிலத்தில் நவம்பர் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நவம்பர் 25-ஆம் தேதி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
அதேபோல், தெலங்கானாவின் 119 இடங்களுக்கும் வாக்குப்பதிவு ஒரே கட்டம் நவம்பர் 30 -ஆம் தேதி நடைபெற்றது.இந்த நிலையில்,வாக்குகள் எண்ணிக்கை பாதுகாப்பாகவும் எளிதாகவும் நடைபெறுவதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்க புள்ளியாகவும், தொடர்பு புள்ளியாகவும் விளங்கும் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த நாட்டு மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.