நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இணைப்பு புள்ளியாக மண் விளங்குகிறது என்று துபாயில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உயரிநிலைக் கூட்டத்தில் சத்குரு வலியுறுத்தி உள்ளார்.
துபாயில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உயரிநிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.இந்தியாவின் சார்பில் இந்த கூட்டத்தில் மண்ணைக் காக்க வேண்டிய அவசியத்தை சத்குரு வலியுறுத்தி பேசினார்.
இதுகுறித்து,சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நீங்கள் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும், நம்பிக்கை எதுவாக இருந்தாலும், சொர்க்கத்தின் எந்த வாசலை தேடி நின்றாலும், நாம் அனைவரும் மண் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள். ஒரே மண்ணின் மூலம் உண்டு வருகிறோம்.
இறந்தால் அதே மண்ணில் புதைக்கப்படுகிறோம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் இணைப்பு புள்ளியாக மண் விளங்குகிறது. மண்ணைக் காக்க ஒற்றை முனைக் கவனம் செலுத்துவதில் ஆன்மீகத் தலைவர்கள் (Faith Leaders) முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.