கர்நாடக மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்றை பதித்ததுள்ளது.இந்த நிலையில்,கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் டிகே சிவகுமார், M.P.பாட்டீல், பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ஜமீர் அகமது கான், ராமலிங்கா ரெட்டி, பிரியங் கார்கே ஆகியோர் அமைச்சரவையில் பதவிவேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் கமல்ஹாசன் , தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ,பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, , சரத் பவார் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, கமல்ஹாசன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
- அப்பொழுது பேசிய ராகுல் காந்தி நாங்கள் உங்களுக்கு ஐந்து வாக்குறுதிகளைத் தந்தோம்
- முதலாவது ‘கிரக லட்சுமி’ திட்டத்தின் கீழ் இல்லதரசிகளுக்கு மாத தோதும் 2000 ரூபாய் வழங்கப்படும்.
- இரண்டாவது ‘கிரக ஜோதி’ ‘ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- மூன்றாவது ‘அன்னபாக்கியா’ ‘ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பிபிஎல் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.
- நான்காவது ‘சக்தி” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளப்படும்.
- ஐந்தாவது ‘யுக நிதி” திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா 3000 ரூபாய் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும்.
- இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நாங்கள் உங்களுக்குப் போலி வாக்குறுதிகளைத் தர மாட்டோம். நாங்கள் சொன்னதைச் செய்வோம். இன்னும் ஒன்று இரண்டு மணி நேரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். அதில் இந்த ஐந்து வாக்குறுதிகளும் சட்டமாக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,இந்த அரசு அனைத்து மக்களுக்கான அரசாக இருக்கும். இந்த அரசு லட்சியமே இந்த நாட்டின் விவசாயிகள் ஏழை எளிய மக்கள் மற்றும் பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது ஆகும்.ஊழல் இல்லாத அரசாங்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.