தாய்லாந்து(thailand) செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் தாய்லாந்து உள்ளது. ஒன்றாக அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 2.2 கோடி வெளிநாட்டவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாக்கு வருகை புரிந்துள்ளனர் . இதன் மூலம் நாட்டுக்கு 2567 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த சூழலில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வண்ணம் புதிய அறிவிப்பை அந்நாட்டு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தங்கிக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடைமுறையானது நவம்பர் முதல் மே மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு மலேசியா, சீனா , தென்கொரியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியர்களே அதிகம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் இந்தியாவில் இருந்து இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களுக்கு விசா தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது