சுவீடன் நாட்டில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி ஒன்பது நான்கு மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டி பின்லாந்து நாட்டில் நடைபெற்றது.
ஐந்தில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலுவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் நீரஜ் சோப்ரா.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பாட்டியாலா வில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தேசிய சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.