உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
10 திறமையான அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது .
விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த தொடரில் இதுவரை 5 லீக் போட்டிகள் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ளன .
விடுமுறை நாளான நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின . உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பும்ராவின் அபார பந்துவீச்சில் மிட்சல் மார்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து வார்னர் மற்றும் ஸ்மித் இணை இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர் . பொறுப்புடன் ஆடிய வார்னர் 41 ரன்களிலும்,ஸ்மித் 46 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
முதல் கோணல் முற்றிலும் கோனால் என்ற பழமொழிக்கேற்ப அவரக்ளை தொடர்ந்து வந்த நடு வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .
இறுதியில் 49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை எடுத்தது.இந்தியா அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும் குல்திப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசான் கிசன்,ரோகித் சர்மா,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய 3 வீரர்களும் ரன் ஏதும் இன்றி டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணிக்கு தேவையான ரன்களை மெல்ல மெல்ல சேர்த்து . ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறமையாக கையாண்ட இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர் .
தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய கே.எல் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன் எடுத்தார். பின்னர் 41.2 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கெத்தாக வெற்றியை பதிவு செய்தது .