இன்ஸ்டாகிராமில் தனது தனித்துவமான நடிப்பால் பல லட்சம் பாலோவர்ளை கொண்டவர் தான் ராகுல் . வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான இவரை விரைவில் திரைப்படங்களில் காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோட்டை பூர்விகமாக கொண்ட இவர் தொடர்ந்து பல நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர் .
Also Read : நாட்டை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு – காதலி குற்றவாளி என தீர்ப்பு..!!
கலைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை பெற வேண்டும் என கடினமாக உழைத்து வந்த ராகுலின் மறைவு அவரின் குடும்பத்தார் மட்டுமில்லாமல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . ராகுலின் மறைவுக்கு தற்போது திரைபிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.