இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கமெண்ட் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் மார்க் ஜக்கர்பர்க் மெட்டா என்னும் தாய் நிறுவனத்தை நடத்தி வருகிறார் . இந்த நிறுவனத்தின் கீழ் வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் , FaceBook உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
உலக மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்தி வரும் இந்த ஆப்களில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது இன்ஸ்டாகிராம் செயலில் ஏரளமான புது புது அப்டேட்டுகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.
Also Read : அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கமெண்ட் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் முதலில் ஸ்டோரிக்கு ரிப்ளை செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்த நிலையில், பயனர்களிடையிலான தொடர்பை அதிகரிப்பதற்காக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த ஆப்ஷனை DISABLE செய்து கொள்ளலாம் என்றும் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இந்த அப்டேட் தற்போது இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.