தமிழகத்தில் பிரதான கட்சியாக செயல்படும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் புத்தகரமாகி உள்ளது.அதிமுக-வில் பதவிச்சண்டை முற்றியுள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு, பொதுக்குழுவில் நிறைவேற்றபடவிருந்த 23 தீர்மானங்களையும், பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாக சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி ஆவேசமாக கத்தினார். பிறகு கே.பி முனுசாமியும் பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாகவும் அவர்கள் கேட்கும் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை தான் எனவும் பேசினார்.இதனையடுத்து அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதி ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அவர் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றிக்கொண்டுள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் பதவிகள் காலவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஸ் அவர்களுக்கு நேற்றைய தினம் கடிதம் எழுதியுள்ளார்.