IPL 2023 சீசனின் கடைசி ஆட்டத்தின் போது லாவெண்டர் ஜெர்சியை அணியவுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி மே 15 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லாவெண்டர் ஜெர்சியை அணியவுள்ளது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றாலும், இன்னும் முதலிடத்தில் உள்ளது.
இந்த சீசனின் கடைசி ஆட்டத்தில் ஜெர்சி நிறத்தை மாற்ற குஜராத் தயாராகி வருகிறது.இம்மாதம் 15ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தற்போதுள்ள ஜெர்சிக்கு பதிலாக லாவெண்டர் நிற ஜெர்சியை அணிய உள்ளனர்.
புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள்,
நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஜெர்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.லாவெண்டர் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் ஒரு குறியீட்டு நிறமாக பயன்படுத்தப்படுகிறது.