ஐ அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘இறைவன்’.
‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு நயன்தாராவும், ஜெயம் ரவியும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார்.
சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படத்தில் ராகுல் போஸ் சீரியல் கில்லராக அச்சுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். படத்தில் உள்ள அதீத வன்முறைக் காட்சிகள் காரணமாக இப்படத்துக்கு ஏ.சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இறைவன் பட திக் திக் காட்சிகள் திகிலூட்டியதா..? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?
“அதிக இடையூறுகள் இல்லாத ஒரு டார்க் சினிமா. இண்டர்வெல் நெருங்க நெருங்க படம் சூடுபிடிக்கிறது. சில ஆச்சர்யங்களும் படத்தில் உள்ளது. சமீபத்திய படங்களில் ஜெயம் ரவியின் சிறந்த பர்ஃபாமன்ஸ் இதுதான்”.
“இறைவன் கோரமான கொலை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காதல் காட்சிகள் பெரிதாக சொல்லிக் அளவுக்கு இல்லை.. கில்லராக நடித்துள்ள ராகுல் போஸின் பிஜிஎம் வேற லெவல். திரைக்கதை பிறமாதம்”.
“படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டராகிவிடும் என்று தோன்றுகிறது. ஜெயம் ரவியின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது”.
“ப்ப்பா, என்ன ஒரு நடிப்பு. ஜெயம் ரவி, நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது”.
மேலும், இறைவன் படம் பார்க்கும் அனைவரும் ராகுல் போஸ் பயங்கரமான சைக்கோவாக நடித்திருக்கிறார் என்பதை மறந்து அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை..