husband tore pregnant woman’s stomach : உத்திரபிரதேச மாநிலத்தில், தன் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிய மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் படவுனில் வசித்து வருபவர் பன்னா லால் என்ற இளைஞர். இவருடைய மனைவி அனிதா.
இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் பன்னா லால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என அனிதாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அனிதா அவருடைய பெற்றோரிடம் கூறிய நிலையில், அந்தப் பிரச்சனையின் போது உங்கள் மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவள் மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்வேன் என மிரட்டியுள்ளார் பன்னா லால்.
இதையும் படிங்க : நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்வதில் என்ன சிக்கல் ஏற்படப் போகிறது? ராமதாஸ்!
இதனிடைய கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று தனக்கு தெரிந்தாக வேண்டும் என்று பன்னாலால் மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென அருகில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை கிழித்து குழந்தை ஆணா/பெண்ணா என தெரிந்து கொள்ள வேண்டும் என முயன்றுள்ளார் (husband tore pregnant woman’s stomach).
இதில் பலத்த காயம் அடைந்த அனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்து விட்டது.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனிதா தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பன்னா லால் மீது அனிதாவின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி சவுரப் சக்சேனா, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் அவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். அவர் அபாரதத் தொகையை செலுத்த தவறினால் இன்னும் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.