நம் வீட்டில் நல்ல சக்தி (divine power) இருக்கிறதா? தீய சக்தி இருக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கும். அப்படியான சந்தேகங்களுக்கு ஆன்மீகம் சார்ந்த சிலவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் தெய்வ சக்தி (divine power) இருப்பதற்கான அறிகுறிகள் :
வீட்டில் தெய்வ சக்தி இருந்தால் வீட்டிற்குள் நுழையும் போதே நமது மனம் அமைதியாக இருக்கும். வெளியில் நாம் எவ்வளவு பிரச்சனையுடன் வீட்டிற்குள் வந்தாலும் மனம் லேசாகி விடும். அது மட்டும் இன்றி வாசனை திரவியங்கள் எதுவும் பயன்படுத்தவே இல்லை என்றாலும் கூட வீடு எப்போதும் ஒரு நறுமணத்துடனே இருக்கும்.
அந்த வீட்டிற்குள் வரும் செய்திகள் அனைத்தும் நேர்மறையாகவே இருக்கும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். மேலும், உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். இவற்றையெல்லாம் விட முக்கியமாக வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது எந்த காரணம் கொண்டும் விளக்கு கருமையடையாது.
வீட்டில் வைக்கும் செடிகள் கருகாமல் நல்லபடியாக செழித்து வளரும். இவையெல்லாம் அந்த வீட்டில் நல்ல சக்தி தெய்வ சக்தி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள் :
எந்த ஒரு வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறதோ, வீட்டிற்குள் நுழைந்தாலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பரஸ்பரமாக பேசிக்கொள்ள முடியாமல் இருக்கிறதோ, அப்போது அந்த வீட்டில் தேவை இல்லாத சக்திகள் நிச்சயமாக இருக்கும்.
அது மட்டும் இன்றி வீட்டில் நீங்கள் எத்தனை பூஜை செய்தாலும் கூட எத்தனை வாசனை திரவியங்களை போட்டாலும் கூட வீட்டில் ஒரு வித துர்நாற்றம் வந்து கொண்டே இருக்கும்.
அதே போல் வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உடல் நலக் கோளாறு, எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் முடிவது, மனம் எப்பொழுதும் சோர்வாக இருப்பது, இளம் வயதாகவே இருந்தாலும் கண்களை சுற்றி கருவளையம், இளம் வயதில் முக சுருக்கம் கூட கெட்ட சக்திகளின் தாக்கங்களாகவே ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதே போல் உங்கள் வீட்டில் பூஜை செய்ய நினைத்தால் செய்ய முடியாது கோவிலுக்கு செல்ல நினைத்தாலும் செல்ல முடியாது. இவை எல்லாம் கண் திருஷ்டியாக இருக்கலாம் அல்லது இறந்தவர்களுடைய ஆத்மாக்களாக இருக்கலாம். மாந்திரீக பிரச்சனையாகவும் இருக்கலாம். இதை முதலில் கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும்.
இப்படி இருக்கும் வீட்டில் எப்போதும் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு தினங்களில் கட்டாயமாக வெண்கடுகை சேர்த்து சாம்பிராணி தூபம் போட வேண்டும். இந்த தூபத்தை தொடர்ந்து போடும் போது தேவையில்லாத கெட்ட சக்திகள் விலகும்.