வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழக்காமல் கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடக்கும் நேரத்தில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், இடையிலே 75 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Also Read : அசைவம் சாப்பிட்டதை எதிர்த்த காதலன்.. விபரீத முடிவு எடுத்த பெண் பைலட்..!!
வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என முன்னதாக கூறப்பட்டிருந்த நிலையில்
காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை (நவ.30) காலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காசிமேட்டில் 4வது நாளாக கடல் சீற்றம் ஆக்ரோஷமாக காணப்படுகிறது
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கவுள்ள நிலையில் இவ்வாறு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .