மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (January 29th)
மேஷம் :
சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிவபெருமானை வழிபடு நன்மை தரும்.
ரிஷபம் :
பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நாள். சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
முருகப் பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.
இதையும் படிங்க : கணிசமாக உயர்ந்தது தங்கம் விலை!!
மிதுனம் :
மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டலாம். அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
விநாயகரை வழிபட தடைகள் விலகும்.
கடகம் :
புதிய முயற்சிகளை தொடங்குவது நன்மை தரும். காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம் :
வெற்றி ஏற்படும் நாள். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.
அம்பிகை வழிபாடு நலம் தரும்.
கன்னி :
வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.
விருச்சிகம் :
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
தனுசு :
மகிழ்ச்சி பெருகும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
மகரம் :
உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
சிவபெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்.
கும்பம் :
சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.
இதையும் படிங்க : ஹெல்மேட்டிற்குள் நாகப்பாம்பு!
மீனம் :
எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு.
பைரவர் வழிபாடு நன்மை சேர்க்கும் (January 29th).