ஜார்கண்ட் மாநில முதல்வர் மீதான பணமோசடி புகார் குறித்து விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரவிட்டுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்;
ஜார்ஜண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது சகோதரர் பசந்த் சோரன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஷெல் கம்பெனிகள் மூலம் பணமோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் பணமோசடி விவகாரம் குறித்து 2 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.