Indian Maritime Information Centre Warning : ‘கல்லக் கடல்’ நிகழ்வு – இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் “கல்லக்கடல்” என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : பாதாம் பிசின் : உடம்பு சூடு முதல்.. ஆண்மைக் கோளாறு வரை குணமாகும்!
இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு.
விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அறிவுறுத்தல் Indian Maritime Information Centre Warning.
இதையும் படிங்க : புகாரில் குறிப்பிட்டவர்களை விசாரிக்க வேண்டும் – பற்ற வைத்த அண்ணாமலை!