விக்ரம் படத்தின் வெற்றி சந்திப்பில் கமலஹாசன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கூட்டத்தில் கமலஹாசன் பேசியதாவது;
“உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரன் ஆனால் போதாது. எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பணத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். நான் சொல்லும் போது யாருக்கும் புரியவில்லை. யோவ், என்னய்யா நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி சம்பாதிப்பேன். அதற்கு சிலர் விமர்சனம் சொன்னார்கள்.
ஆனால், அது வந்துட்டு இருக்கு. நான் என் கடனை அடைப்பேன், நான் வயிறார சாப்பிடுவேன், என்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன். அதற்குப் பிறகு இல்லை என்றால் இல்லை என்று தைரியமாகச் சொல்லுவேன். எனக்கு வள்ளல் ஆகுவதில் நம்பிக்கை இல்லை, மனிதனாக இருப்பதே போதும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியதன் மூலம் விக்ரம் படம் வசூலில் 300 கோடியை நெருங்கிவிட்டது என்பதை நாசுக்காக கமலஹாசன் பேசியிருக்கிறார்.