காஞ்சிபுரத்தில் தனியார் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ரஜினி பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பேருந்து நிலையம் அருகே நெல்லுக்காரர் வீதியில் புதியதாக முடிதிருத்தகம் கடை ஓன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தனியாள் முடிதிருத்தகம் கடையைத் திறந்து வைத்தார்.
மேலும் இந்த திறப்பு விழாவையொட்டி பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் ரஜினி நடித்த பேட்டை பட உல்லா லா பாடல் இசைக்கப்பட்டது.இதனைக் கேட்டு VIBE ஆன காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குத்தாட்டம் போட்டார்.
மேலும் இவரது நடனத்திற்குச் சுற்றி இருந்தவர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.