திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறிவிட்டு இன்னும் ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு கனிமொழி எம்.பி மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு கடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்(ECRC)ஆதரவற்றவர்களுக்கான மனநல காப்பகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரம் & ஊரகப் பணிகள் துறை இணை இயக்குநர் திருமிகு. கற்பகம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு. சிவக்குமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை சுகாதார சேவை துணை இயக்குநர் திரு. பொற்செல்வன், Banyan & BALM அமைப்பின் இயக்குநர் திரு. கிஷோர் குமார், R-SOYA அமைப்பின் நிறுவனர் திரு. சரவணன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி,
மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததை அடுத்து தஞ்சாவூரில் போலி சாராயம் மேலும் ஒருவர் இதே போல் உயிரிழந்துள்ளது குறித்த கேள்விக்கு, இது போன்று தமிழ் நாட்டில் நடைபெற்று வருவது அதிர்ச்சியையும் மன வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.மேலும் கடந்த காலங்களில் இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், அதற்கு காரணம் குடிப்பழக்கம் தான் என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் பொது மக்களும் தங்களது உடல்நலத்தில் அக்கறை கொண்டு விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா சதோரியமற்றதா என்ற செய்தியாளர் கேள்விக்கு திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறிவிட்டு இன்னும் ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு கனிமொழி எம்.பி மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு கடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.