கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுக எம்.பி.கனிமொழி(kanimozhi) தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தையுடனான அனுபவங்களை பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தந்தையுடனான நினைவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி.(kanimozhi) ட்வீட் செய்துள்ளார்.
அதில், தலைவர் கலைஞரின் சிந்தனைகள் காலங்களைக் கடந்து நம்மை வழிநடத்தக் கூடியவை. எக்காலத்திற்கும் பொருத்தமான அவரது கருத்துகள், இன்றைய அரசியல் சூழலிலும் கூர்மையும் பொருள் பொதிந்தும் உள்ளன.
மேலும் எங்கு காணினும் உங்கள் முகம். எங்குச் சென்றாலும் உங்கள் அடையாளம். எங்கு நோக்கினும் உங்கள் நினைவுகள். ஓய்வின்றி உழைத்த நீங்கள் இங்குத் துயில் கொண்டிருக்கிறீர்கள். எங்களின் உள்ளொளியாக இருந்து நீங்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பணியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.