சின்னத்திரை நடிகையான சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை சவுஜன்யா, சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சீரியலை தாண்டி ஒருசில படங்களிலும் நடித்துள்ள இவர் பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நடிகை செளஜன்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலை முடிவுக்கு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், தனது தற்கொலைக்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், தனக்கு எந்த உடல்நல பிரச்சனை எதுவும் இல்லை என்றும், தான் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல தோல்விகள் மனதளவில் தன்னை பாதித்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து நடிகை செளஜன்யாவுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர்கள் மற்றும் பணிபுரிபவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.