மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார். உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக சண்முகநாதன் இருந்தார். கருணாநிதியின் நிழல் என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன், 1967 ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை உதவியாளராக இருந்தார்.