கேரளாவில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என வீடியோ மூலம் சிறுவன் வேண்டுகோள் வைத்த நிலையில் தற்போது சிறுவனின் வேண்டுகோளுக்கு அம்மாநில அரசு செவி சாய்த்துள்ளது.
கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி உணவில் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணியும், வறுத்த சிக்கனும் கொடுக்க வேண்டும் என வீடியோ மூலம் ஷங்கு என்ற சிறுவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் செம வைரலான நிலையில் சிறுவன் ஷங்குவின் கோரிக்கை ஏற்று கொள்கிறோம். விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கிறோம் என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வீடியோ வைரலான நிலையில், பலரும் ஷங்குவிற்கு பிரியாணியும் வறுத்த சிக்கனும் வாங்கி தருவதாக அவரது தாயிடம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது மாநில அரசு இதுகுறித்து கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது .