நடிகை திவ்ய பாரதி கிங்ஸ்டன் (Kingston) பட குழுவினருடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 20201ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
இவர் தன்னுடைய முதல் படத்திலேயே அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.
இதையும் படிங்க : January 29TH 2024 : இன்றைய ராசி பலன்!!
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் பிரபலம் முகின் ராவுடன் இணைந்து ‘மதில் மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்த முடித்துள்ளார்.
மேலும் பரியேறும் பெருமாள் படத்தின் கதாநாயகன் கதிருக்கு ஜோடியாக ‘ஆசை’ என்கிற படத்திலும் நடித்துக் கொண்டுள்ளார் திவ்யபாரதி.
தற்போது தொடர்ந்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளன. முன்னதாக அண்மையில் திவ்யபாரதி நடித்த வெப் தொடர் ஒன்று வெளியாகியிருந்தது.
இயக்குனர் சேரன் ‘ஜர்னி’ என்ற அந்த வெப் தொடரை இயக்கியிருந்தார். தற்போது சோனி ஓடிடி தளத்தில் அந்த வெப் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே தற்போது நடிகை திவ்ய பாரதி நடிப்பில் கிங்ஸ்டன் என்கிற திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.
இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படிங்க : திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் IAS பதவி ஏற்றுக்கொண்டார்!
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் கோட் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார் திவ்யபாரதி.
இந்நிலையில், நேற்று ‘கிங்ஸ்டன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட திவ்யபாரதிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி சர்பிரைஸ் கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.
அப்போது ஜிவி பிரகாஷ் மற்றும் கிங்ஸ்டன் (Kingston) பட குழுவினருடன் சேர்ந்து திவ்யபாரதி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.