கொடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது (Kodanadu murder case). அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை.
ஒரு நாட்டின் முன்னாள் முதல்வருக்கு இந்த நிலை என்பது குறித்து மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு:
முதல்வர் கடிதம் எழுதி இருப்பது அவருடைய கொள்கை. பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா தேவையில்லையா என்பதை சட்ட வழக்கறிஞர் குழுவிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வந்தவுடன் விரிவான அறிக்கை தரப்படும்.
காய்கறி விலை உயர்வு சம்பந்தமான கேள்விக்கு:
இது சம்பந்தமாக கடுமையான அறிக்கை வரவிருக்கிறது.
மக்களுக்கு பல பிரச்சனை உள்ள நிலையில் கொடநாடு கொலை வழக்கு (Kodanadu murder case) அவசியமா என்ற கேள்விக்கு:
எல்லாத்தையும் காட்டிலும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து தமிழக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாட்டு மக்களுக்கு தந்த அம்மாவின் இடமாகிய கொடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது.
அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. ஒரு நாட்டின் முன்னாள் முதல்வருக்கு இந்த நிலை என்பது மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
தென்காசி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை குறித்த கேள்விக்கு:
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று ஜெயக்குமார், இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:
அவருடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம் என்னவாக இருக்கிறது என்பதை கட்சியினுடைய தொண்டர்களும் மக்களும் புரிந்து இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.