ஐசிசி வழங்கும் 2023 ஆம் ஆண்டின் ODI போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வென்றுள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலிக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் ரன் மெஷின் விராட் கோலி சுமார் 1,377 ரன்கள் குவித்தார். அதில் 6 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் உள்ளடக்கி இருக்கிறது.
இதேபோல் கடந்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகளாக நீடித்து வந்த
ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி முறியடித்தார் அப்போது சச்சினும் அந்த மைதானத்தில் இருந்தார்.
உலகக் கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ரசிகர்களுக்கு இமை விருந்தை பரிசாக கொடுத்தார் .
உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி அதில் மட்டும் சுமார் 765 ரன்கள் குவித்து கெத்து காட்டினார் .
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த விருது விராட் கோலி பெறப்போகும் 7-வது ஐசிசி விருது என்பது குறிப்பிட தக்கது . ODI போட்டிகளில் 4-வது முறையாக சிறந்த வீரருக்கான விருதினை விராட் கோலி பெற உள்ளார் .
இந்த வருட கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2012, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை விராட் கோலி வென்று அசத்தியுள்ளார்.
Also Read : https://itamiltv.com/padma-bhushan-award-announcement-for-vijayakanth/
கடந்த ஆண்டை போல இந்த வருடமும் விராட் கோலிக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி விளையாடிய பல போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் இடம்பெற்ற போட்டிகளில் இருந்து அவரே விடுப்பு கேட்டு சென்று விடுகிறார். இதனால் விராட்கோலி ஏன் இப்படி செய்கிறார் என ரசிகர்கள் சற்று குழப்பித்தில் உள்ளனர்.