அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யனும், ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி தலைவராகவும் நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து EPS வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அதிமுக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.R. விஜயகுமார், Ex. M.P., அவர்களும், துணைச் செயலாளர் திரு. கோவிலம்பாக்கம் C. மணிமாறன் அவர்களும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. சிங்கை G. ராமச்சந்திரன் அவர்களும், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. கோவை சத்யன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
Also Read : 110 பயணிகளுடன் சென்ற ரஷ்யா விமானம் வெடித்து சிதறி விபத்து..!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
மாணவர் அணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக S.R விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். புரட்சித் தலைவி பேரவை துணை செயலாளராக கோவிலம்பாக்கம் மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என EPS வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.