தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களுக்கு KPY பாலா கொடுத்துள்ள தரமான பதில் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பாலா சமீப காலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கித் தவித்த 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க : Plastic Surgery : இது சமந்தாவா..? இல்ல ரைசாவா..? ஹாட் பிக்ஸ்!
அந்த வகையில் முன்னதாக சில பகுதிகளுக்கு 4 வேலையில்லா ஆம்புலன்ஸ்கள் வழங்கியுள்ள பாலா 5 ஆவதாக வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்து பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிலளித்துள்ளார் பாலா.
இதையடுத்து பேசிய பாலா தன்னை பாராட்டி ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி கூறியதோடு, தன்னை விமர்சிப்பவர்களுக்கு தரமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
“ஆமாம் இருக்கிறார்கள் தான்…. எனக்கு பின்னால் இருப்பவர்கள் அவமானமம், கஷ்டம் ஆகியவை தான்”.
இன்னும் ஒரு சிலர் என்னை பற்றி, நீ எதிர்காலத்தில் சிக்னலில் பிச்சை எடுப்ப, அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல் தான் போவேன் என்று சமூக வலைத்தளத்தில் கமெண்ட் போட்டு வருவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க : விமர்சிப்பவர்களுக்கு KPY பாலா கொடுத்துள்ள தரமான பதில்!
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ.. அந்த சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும்…
எனவே எனக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை என்ற பாலாவின் இந்த கருத்து விமர்சிப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்குமென்பதில் ஐயமில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்,
இனியாவது அத்தகையோர் பாலாவை போன்றோரை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு தங்களால் இயன்ற உதவிகளை தங்களை சுற்றியுள்ள இல்லாதப்பட்டோருக்கு செய்தால் நன்றாக இருக்கும் என்பதே இங்கு சாமானியர்களின் எதிர்பார்ப்பு!